×

சுப்ரீம் கோர்ட் விசாரணையை பார்த்த சர்வதேச நீதிமன்ற நீதிபதி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற விசாரணை முறைகளை சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி பார்வையிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நடைபெற்றது. அந்த அமர்வை சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி சார்லஸ்வொர்த் பார்வையிட்டு இந்திய நீதிமன்ற நடவடிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஹிலாரி பங்கேற்கார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அவரை வரவேற்று பேசுகையில், ‘சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி சார்லஸ்வொா்த்தை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் உள்ள மேயோ கல்லூரியில் ஆசிரியராக அவர் பணியாற்றியிருக்கிறார். மிகச் சிறந்த நீதிபதியான ஹிலாரி, இந்தியாவின் நண்பர்’ என்றார். முன்னதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரியை வரவேற்றார். ஆஸ்திரேலிய சர்வதேச வழக்கறிஞரான ஹிலாரி, கடந்த 2021ம் ஆண்டில் இருந்து சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சுப்ரீம் கோர்ட் விசாரணையை பார்த்த சர்வதேச நீதிமன்ற நீதிபதி appeared first on Dinakaran.

Tags : International Court ,Supreme Court ,New Delhi ,Judge ,Hilary ,Chief Justice ,D. Y. ,Chandrasuit ,Hilary Charlesworth ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...