×

போடி சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் நோய் தாக்குதலால் மொச்சை விளைச்சல் பாதிப்பு

*விவசாயிகள் கவலை

போடி : போடி சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் நோய் தாக்குதலால் மொச்சை பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
போடி அருகே சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மானாவரி நிலங்கள் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் இருப்பதால் அந்தந்த காலத்திற்கேற்ப மானாவாரி பயிர் களை விதைத்து தக்க தருணத்தை விவசாயிகள் சரியாக பயன்படுத்தும் விதமாக தேவையான பயிர்களை விதைப்பு செய்து விவசாயத்தை காத்து வருகின்றனர்.

அதன்படி நிலக்கடலை, சோளம், மக் காச்சோளம், துவரை, பாசிப்பயறு மற்றும் மொச்சைப்பயறு என விதை த்து அதிக நீர் பாசனம் இன்றி எப்போதாவது கிடைக்கும் வான் மழை யை ஊட்டச்சத்தாக எடுத்துக் கொண்டு வறண்ட நிலையிலேயே வள ர்த்து எடுத்து அறுவடை செய்து சாகுபடியினை விடா பிடியாக செய்து வரு கின்றனர்.அதன்படி போடி அருகே ராணிமங்கம்மாள் சாலை நீண்ட பரவு, சில மலை, 4 சூலப்புரங்கள்,பெருமாள் கவுண்டன்பட்டி, மல்லிங்காபுரம், அம்மாபட்டி, ராசிங்காபுரம் என பல கிராமங்களில் மொச்சைப் பயிர் கட ந்த 3 மாதத்திற்கு முன்பாக விதைத்து தீவிரமாக வளர்த்து வந்தனர்.

ஏற்கனவே தொடர் மழை பெய்து வந்ததையடுத்து மழை நின்று வறப் பனி த்துவங்கி வீசி வரும் நிலையில் திடீரென பருவ கால சூழலால் தட்ப வெப்ப நிலையும் மாறி பனியும் வெயிலும் மாறி மாறி வீசி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அறுவடை நெருங்கியுள் ள மொச்சை பயிர்களில் மஞ்சள் நோய் என்னும் வைரஸ் நோய் தாக்குதலால் நாட்டு ரக மொச்சை பயறு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு கருப்பு மற்றும் பழுப்பு நிறமாக நிறமும் மாறியுள்ளது.

அறுவடை துவங்கி விட்டதால் தினசரி சந்தையில் ஒரு கிலோவிற்க்கு 60 ரூபாய் விற்கப்படும் நிலையில் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ 28 முதல் 30 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மஞ்சள் நோய் என்னும் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக குறைவான விளைச்சல் கண்டுள்ளதால் பெரும் இழப்பையும் நட்டத்தையும் விவசாயிகள் சந்தித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு விவசாயத்துறை யினர் நேரில்கள ஆய்வு செய்வது நோய் தாக்குதலில் சிக்கியுள்ள இந் த நாட்டு ரக மொச்சை பயிரை மீதம் இருப்பதையும் பாதுகாத்திட வேண் டும் என்று விவசாயிகள் கோரிக் கை விடுத்துள்ளனர்.

The post போடி சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் நோய் தாக்குதலால் மொச்சை விளைச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Manavari ,
× RELATED தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு