×

தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு

போடி, ஜூன் 22: தேனி மாவட்டம், போடி கீழத்தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் சுரேஷ் (38). போடி முந்தல் சாலையில் உள்ள அணைப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள மேட்டுப்புலம் பகுதியில் சுருளிக்கு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். போடி புதூரை சேர்ந்தவர்கள் வனராஜ், பொன்னுத்தாய், தெய்வம். சுருளியின் தோட்டம் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் வனராஜ் உள்ளிட்ட 3 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர். நிலம் தொடர்பாக சுருளிக்கும், வனராஜ், பொன்னுத்தாய், தெய்வம் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் சுருளியின் தோட்டத்திற்குள் அத்துமீறி புகுந்த வனராஜ், பொன்னுத்தாய் மற்றும் தெய்வம் ஆகியோர் அங்கிருந்த எல்லைக்கற்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை பார்த்த சுரேஷ் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சுரேஷை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் சுரேஷிற்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து போடி நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த எஸ்.ஐ. இளங்கோவன், தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகிறார்.

The post தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Sethuraman ,Suresh ,Bodi Keezatheru, Theni district ,Suruliku ,Mettupulam ,Amampillaiyar ,Bodi Munthal Road.… ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போடப்படாத கனவுப்பாதை...