×

மழையால் பாதிக்கப்பட்ட ஏரல் ஆதார் மையம் இன்று முதல் செயல்படும்

ஏரல்,பிப். 13: ஏரலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாசில்தார் அலுவலக ஆதார் மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் செயல்படும் என தாசில்தார் கோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை, வெள்ளத்தின்போது ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த ஆதார் மையம் சீரமைக்கப்பட்டு உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் செயல்பட உள்ளது. எனவே பொதுமக்கள் ஆதார் தொடர்பான குறைகளை இனி ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் சரி செய்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post மழையால் பாதிக்கப்பட்ட ஏரல் ஆதார் மையம் இன்று முதல் செயல்படும் appeared first on Dinakaran.

Tags : Aral Aadhaar Center ,Arel ,Tahsildar ,Gopal ,Aadhaar Center ,Tahsildar Office ,Erel ,
× RELATED சிவகங்கை அருகே டூவீலரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்