×

மாநில ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விடுதி மாணவர்கள்

 

ராமநாதபுரம், பிப்.13: மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 64வது ஆர்.டி.ஜி மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. 38 மாவட்டங்கள் பங்கேற்ற இப்போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் யு 17 பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர்.

இதுபோன்று பிப். 7ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் யு 14 பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றனர். இதனையடுத்து மாநில அளவிலான இரண்டு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவர்கள் நேற்று தங்கப்பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களுடன் வந்து கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ரத்தினசபாபதி, தலைமையாசிரியர் வள்ளுவன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார், ஹாக்கி சங்க செயலாளர் கிழவன்சேதுபதி கலந்து கொண்டனர்.

The post மாநில ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விடுதி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Dormitory ,hockey ,Ramanathapuram ,level hockey ,64th RTG State Level Hockey Games ,Tamil Nadu School Education Department ,Trichy District, Manaparai ,State Hockey Tournament ,Dinakaran ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...