×

அரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா கடைகள், ராட்டினம் அமைக்க ரூ.70.55 லட்சத்திற்கு ஏலம்

 

காரமடை, பிப்.11: கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பாண்டின் தேர்த்திருவிழா வரும் 17-ம் தேதி கிராம சாந்தி, 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 24-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு காரமடை நகர பகுதிகளில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 11 இடங்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏலம் நடைபெற்றது.  இந்த ஏலத்தில் காரமடை பேருந்து நிலைய வளாகம் அதிகபட்சமாக ரூ.57.25 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. இந்த இடங்களில் தற்போது ராட்டினம்,மேஜிக் ஷோ, தூரி உள்ளிட்ட கேளிக்கை விளையாட்டு உபகரணங்கள், கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 11 இடங்களில் இரண்டு இடங்களை தவிர்த்து 9 இடங்கள் ரூ.70.55 லட்சத்திற்கு ஏலம் போனதாக நகராட்சி வட்டாரங்கள் தகவல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு தேர்த்திருவிழாவின் போது காரமடை நகராட்சிக்குட்பட்ட 11 இடங்கள் ரூ.34.04 லட்சத்திற்கு ஏலம் போன நிலையில் தற்போது இரு மடங்காக ரூ.70.55 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.இதனால் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. வரும் 22 ம் தேதி முதல் மார்ச் மாதம் 4 ம் தேதி வரை ரூ.70.55 லட்சத்திற்கு நகராட்சி இடங்கள் ஏலம் போனது என்றார்.

The post அரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா கடைகள், ராட்டினம் அமைக்க ரூ.70.55 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Aranganathar Temple ,KARAMADA ,ARANGANATHA ,VAINAVA ,KOWAI DISTRICT ,Masi ,Arangnathar Temple ,Bid ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...