இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தொடர்கிறது. இமாச்சல் மலைப் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தபோது சட்லஜ் நதிக்கரையில் கார் விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த உள்ளூர் ஓட்டுநர் டென்சிங் உயிரிழந்த நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு 7வது நாளாக ஈடுபட்டுள்ளது.
The post இமாச்சலப் பிரதேசம்: வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக நீடிக்கிறது appeared first on Dinakaran.