×

சாத்தான்குளம் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

சாத்தான்குளம், பிப்.10: சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொத்தடிமைத்தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கலைவாணி அறிவுறுத்தலின்பேரில் கணிதவியல் துறைத்தலைவர் ஜமுனா ராணி உறுதிமொழியை வாசிக்க பேராசிரியர்களும், மாணவிகளும், அலுவலக பணியாளர்களும் ஏற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மாணவர் தமிழ் மன்ற உறுப்பினர்கள், பேராசிரியைகள் பூங்கொடி, மெல்பா ஆகியோர் செய்திருந்தனர்.

The post சாத்தான்குளம் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Satankulam College ,Chatankulam ,Chatankulam Government College of Arts and Science for Women ,Jamuna Rani ,Kalaivani ,
× RELATED கனிமொழி பற்றி அவதூறு: பாஜ பிரமுகர் கைது