×

கடம்பூர் அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி

கயத்தாறு,பிப்.10: கடம்பூர் அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலியானார். கடம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கே.சிதம்பராபுரம் மேட்டு தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் ரவீந்திரன் (62). இவருக்கு சுஜலதா என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். நேற்று காலை ரவீந்திரன் ஊருக்கு அருகே உள்ள சிவன் கோவில் குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்திற்குள் தவறி விழுந்ததில் ரவீந்திரன் பரிதாபமாக இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்த கடம்பூர் காவல் நிலைய போலீசார், ரவீந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கடம்பூர் அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kadampur ,Gayathur ,Paramasivam ,Ravindran ,K. Chitambarapuram Mettu Street ,Sujalatha ,
× RELATED கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில்...