×

பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது; பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது என்றும் பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகளுடன் இணைந்து களம் காண வியூகம் அமைத்து வருகிறது. ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் எந்த அணிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் பிளவுபட்ட அதிமுக, பாஜக கூட்டணியை ஒன்று சேர்க்கும் முயற்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.

இதனிடையே, ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது என்றும் பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார் என்று கூறினார். மேலும் ஜெயக்குமார் பதவி வெறி பிடித்தவர் அவரது கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை எனவும் கூறினார். இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது நிச்சயம் எங்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் தங்களிடம் பேச்சு நடத்தி வருகின்றன, விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும் என்றும் அவர் பேசினார்.

 

The post பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது; பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார்: ஓ.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Palaniswami ,O. Panneerselvam ,Chennai ,
× RELATED சொன்னத எப்போ செஞ்சி இருக்காங்க… பாஜ...