×

கொரோனா பணிக்கு கூடுதல் மதிப்பெண் 1021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக கூட்டரங்கில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 1021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். அவர் பேசியதாவது: கொரோனா காலங்களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 6 மாதங்கள் கொரோனா காலங்களில் பணியாற்றியிருந்தால் 2 மதிப்பெண், ஒன்பது மாதம் பணியாற்றி இருந்தால் 3 மதிப்பெண், பதினெட்டு மாதம் பணியாற்றி இருந்தால் 4 மதிப்பெண், 2 ஆண்டு காலம் முழுமையாக பணியாற்றியிருந்தால் 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்து இதற்கு ஒப்புதல் தந்தோம். பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் மேலும் 1251 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

மேலும் 983 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிக்கப்பட்டு பணிநியமன ஆணை வழங்கும் நிலையில் உள்ளது.  2271 கிராமிய சுகாதார செவிலியர்கள், 350 ஆய்வக நுட்புநர்களுக்கு விரைவில் பணி ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

* மருத்துவ சேமநல நிதி
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதுவரை 11,215 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மருத் துவ சேமநல நிதி கடந்த அரசில் ரூ.50 லட்சமாக இருந்தது. அது இன்றைக்கு முதல்வர் வழிகாட்டுதலோடு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டு 12 குடும்பங்களுக்கு இன்றைக்கு மருத்துவ சேமநலநிதி 12 பேருக்கு தலா ரூ.1 கோடி என்கிற வகையில் 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் 7 குடும்பங்களுக்கு மிக விரைவில் மருத்துவர் சேமநல நிதி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post கொரோனா பணிக்கு கூடுதல் மதிப்பெண் 1021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,M.Subramanian ,CHENNAI ,M. Subramanian ,Medical Staff Selection Board ,Dr. MGR Medical University ,Kindi Tamil Nadu ,Corona ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்