×
Saravana Stores

ஜேக்கப் கல்விக் குழுமம் சார்பில் வண்ண நாள் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர், மணவாளநகரில் அமைந்துள்ள ஜேக்கப் கல்விக் குழுமத்தின் சார்பில் வண்ண நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கல்வி குழும நிறுவனர் மற்றும் தலைவர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் ஜி.ஜாய்ஸ் மரியா முன்னிலை வகித்தார். இந்த வண்ணநாள் விழாவை முன்னிட்டு பள்ளியின் வகுப்பறைகள் அனைத்தும் பழங்கள், பூக்கள் மற்றும் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டன. மேலும் விழாவில் மாணவ, மாணவிகள் திறமைகளையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வேடம் அணிந்து வந்து நடித்துக் காட்டினர்.

The post ஜேக்கப் கல்விக் குழுமம் சார்பில் வண்ண நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Color day ,JACOB Education Group ,Thiruvallur ,Jacob Educational Group ,Manavalanagar, Thiruvallur ,James Jayaraj ,Education Group ,Chief Minister ,G. Joyce Maria ,Color Day Festival ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...