×

அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட நிரந்தர தீர்வு ஏற்படுத்த டிடிவி. வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: குஜராத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட சென்னை காசிமேட்டை சேர்ந்த 6 மீனவர்கள் திசைமாறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் கைது செய்யப்பட்டு பாக். சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை மீட்பதோடு, அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

The post அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட நிரந்தர தீர்வு ஏற்படுத்த டிடிவி. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TTV ,CHENNAI ,AAMUK ,general secretary ,DTV ,Dinakaran ,Kasimet, Chennai ,Gujarat ,Pakistan ,Rameswaram ,
× RELATED துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு...