×

பாகிஸ்தானில் பயங்கரம் தீவிரவாதிகள் தாக்குதல் 10 போலீஸ் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணம், தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது, தீவிரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் எலைட் படையை சேர்ந்த 6 போலீசாரும் அடங்குவர். முந்தைய ஆண்டு நடைபெற்ற பல தாக்குதல்களை கருத்தில் கொண்டு, உள்ளூர் போலீசாருக்கு ஆதரவாக அப்பகுதியில்எலைட் போலீஸ் பிரிவு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தினர். இரண்டரை மணி நேரத்திற்கும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post பாகிஸ்தானில் பயங்கரம் தீவிரவாதிகள் தாக்குதல் 10 போலீஸ் பலி appeared first on Dinakaran.

Tags : Peshawar ,Dera Ismail Khan ,Khyber-Pakhtunkhwa ,Pakistan ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் சவுதி விமானம்...