×

சாலை பாதுகாப்பு விழா கருத்தரங்கம்

 

உடுமலை,பிப்.5: தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் மற்றும் பேரணி உடுமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. பேரணியை உதவி கோட்ட பொறியாளர் ராமுவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.சாலை பாதுகாப்பு அலகு உதவி கோட்ட பொறியாளர் கதிர்வேல், வாகன ஆய்வாளர் ஜெயந்தி,உதவி பொறியாளர் லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உடுமலை உட்கோட்ட அலுவலகத்தில் துவங்கிய பேரணி மத்திய பேருந்து நிலையத்தில் முடிந்தது. பேரணியில் சென்றவர்கள், “இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். மித வேகத்தில் செல்ல வேண்டும்.தேவைப்படும் நேரத்தில் மட்டுமே ஹைபீம் விளக்கு பயன்படுத்த வேண்டும்.மித வேகமாக செல்வோர் இடதுபுறத்தில் ஒதுங்கி பிற வாகனங்களுக்கு வழிவிட வேண்டும்.

குடிபோதையில் வாகனங்களை இயக்க கூடாது.சாலை விதிகளை மதிக்க வேண்டும். ஓடும் பேருந்தில் ஏறவோ,இறங்கவோ கூடாது.ஆரம்புலன்சு மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட வேண்டும்.எதிரில் உள்ள சாலை தெரியாமல் வாகனங்களை முந்தக்கூடாது என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post சாலை பாதுகாப்பு விழா கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Road Safety Festival Seminar ,Udumalai ,Tamil Nadu Highway Department ,Udumalai Government Arts College ,Assistant ,Ramuel ,District Transport Officer ,Nagarajan ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...