×

பாலம் கட்ட வைத்திருந்த இரும்பு கம்பி திருட்டு

சங்கராபுரம், பிப். 4: சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் ராஜா(42). இவர் நாமக்கல்லில் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் சங்கராபுரம் அருகே உள்ள பாச்சேரில் தரைபாலம் கட்ட காண்ராக்ட் எடுத்துள்ளார். பாலத்தின் கட்டுமான பணிகளை செய்வதற்காக ராஜா சில தினங்களுக்கு முன் 820 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகளை அங்கு வாங்கி வைத்திருந்தார். பின்னர் பணிகளை தொடங்குவதற்காக அங்கு சென்று பார்த்தபோது இரும்பு கம்பிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசில் ராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குபதிவு செய்து கம்பியை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

The post பாலம் கட்ட வைத்திருந்த இரும்பு கம்பி திருட்டு appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Munusamy ,Raja ,Kosappadi ,Namakkal ,Bacher ,Dinakaran ,
× RELATED வாகன சோதனையில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்