×

போடி அருகே கோஷ்டி மோதல்: 6 பேர் மீது வழக்கு

போடி, பிப். 4: போடி அருகே, கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.போடி அருகே உள்ள சிலமலை டி.எஸ்.பி காலனியை சேர்ந்தவர் மீன்ராஜ் மகன் செண்பகராஜா (29). போடி டிஎஸ்பி காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (47). இப்பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு நடந்த திருவிழாவில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக செண்பகராஜாவுக்கும், பாலமுருகனுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிலமலை வ.உ.சி. சிலை பகுதியில் செண்பகராஜா நடந்து சென்று கொண்டிருந்தார்.

அங்கு வந்த பாலமுருகன், அவரது நண்பர் துரைப்பாண்டி(47) ஆகியோர் செண்பகராஜாவிடம் தகராறு செய்ததுடன், அவரை சராசரியாக தாக்கினர். இதனால், ஆத்திரமடைந்த செண்பகராஜா தரப்பினர் சிலமலை பத்திரகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சின்னராமன் மகன் செல்வகுமார்(37), சோலைப்பாண்டியன்(58) ஆகியோர், பாலமுருகனின் உறவினரான ராமர்(49) என்பவரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக செண்பகராஜனும், ராமரும் போடி தாலுகா காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். இதன்பேரில் எஸ்.ஐ இதிரிஸ்கான் இருதரப்பிலும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post போடி அருகே கோஷ்டி மோதல்: 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Meenraj ,Senpakaraja ,Silamalai DSP colony ,Balamurugan ,Bodi DSP Colony ,Dinakaran ,
× RELATED புகையிலை விற்ற 3 பேர் கைது