×

55வது நினைவு நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் மற்றும் திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன், மாநில நிர்வாகி ஆதிசேஷன், நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஒன்றிய, நகர செயலாளர்கள் அரிகிருஷ்ணன், சி.சு.ரவிச்சந்திரன், கூளூர் ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் சிட்டிபாபு, நந்தகோபால், விஜயகுமார், மதியழகன், ராஜசேகர், நாகராஜ், கொப்பூர் திலீப்குமார், குமரன், கமலக்கண்ணன், மிஸ்டர் தமிழ்நாடு டி.ஆர்.திலீபன், வெங்கத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகனசுந்தரம், சத்யா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் கலந்துகொண்டு 4000க்கும் மேற்பட்டோருக்கு சேலைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து 3000 பேருக்கு சமபந்தி விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சிவாஜி, கோயில் அறங்காவலர் அஞ்சன் லோக மித்ரா, தலைமை செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேலு, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள், தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், துணை அமைப்பாளர் சங்கர், சம்பத், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமிஉட்பட பலர் உடன் இருந்தனர். இதேபோல், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கட்சி கொடியை ஏற்றி, அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி நேற்று பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமையில், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், அவைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில், பொருளாளர் ஜெயராமன், துணைச்செயலாளர்கள் பார்த்திபன், திரிபுரசுந்தரி, நிர்வாகிகள் அப்துல் பரீத், கவுன்சிலர்கள் கோகுல்கிருஷ்ணன், கோல்டுமணி, ஜீவா, மகளிரணி பிரபாவதி உட்பட பலர் கலந்துகொண்டு திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஊத்துக்கோட்டை நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பூண்டி வடக்கு ஒன்றியம் திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் ஜான்.

பொன்னுசாமி தலைமையில் அவைத்தலைவர் ராகவன், ஒன்றிய துணைச்செயலாளர் வேல்முருகன், பொருளாளர் பாலாஜி, மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜ், ரகு ஆகியோர் சீத்தஞ்சேரி மும்முனை சந்திப்பில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் கச்சூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில், நிர்வாகிகள் சிவய்யா, காண்டீபன், வக்கில் சோமசுந்தரம், நாகராஜ், சேகர், வேலு, ரஞ்சித், பாபு, அரிகரன், வெங்கடாதிரி, சத்யா உட்பட பலர் கலந்துகொண்டு அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். வடக்கு ஒன்றியத்தில் அரசு வக்கில் வெஸ்லி, கஜேந்திரன், ஊராட்சி தலைவர்கள் சரசு பூபாலன், பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேரூர் திமுக சார்பில், அண்ணா நினைவு நாளையொட்டி பஜாரில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு பேரூர் செயலாளர் பாபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் உதயசூரியன், சஞ்சய்காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் பேருந்து நிலையத்தில் அண்ணா சிலைக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆனந்தி செங்குட்டுவன், மோனிஷா சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

* சமபந்தி விருந்து
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கோயிலில் நேற்று மதியம், 12 மணியளவில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவடி மண்டபத்தில் சமபந்தி விருந்து வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமபந்தி விருந்தினை தொடங்கி வைத்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் தீபா, கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, வி.சுரேஷ்பாபு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டு பக்தர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். தொடர்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

The post 55வது நினைவு நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை: எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Anna Tiruvallur ,Perarinjar Anna ,Thiruvallur West District DMK ,Perarirnjar Anna ,Tiruvallur ,Manavalanagar ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...