×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டு சிறை தண்டனை: அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு அரசு பரிசுகள் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காக நேற்று மற்றொரு நீதிமன்றம் இம்ரான் கான் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

ராவல்பிண்டியில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்புக்கூறல் நீதிமன்றம் இம்ரான் கான் தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கு பொது அலுவலகத்திற்கு போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும், அதே நேரத்தில் ரூ.75.7 லட்சம் ($2.7 மில்லியன்) அபராதமும் விதிக்கப்பட்டது. அரச இரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு மறுநாள் இந்த தீர்ப்பு வழங்கபட்டுள்ளது. தண்டனைகள் தொடர்ச்சியாக அல்லது ஒரே நேரத்தில் நடத்தப்படுமா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கபடவில்லை.

இம்ரான்கான் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பிரதமராக இருந்தபோது பெற்ற 140 மில்லியன் ரூபாய்க்கு ($501,000) அதிக மதிப்புள்ள பரிசுகளை விற்றதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கபட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கபட்ட நிலையில், மற்ற வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டு சிறையில் இருந்தார்.

The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டு சிறை தண்டனை: அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Imran Khan ,Islamabad ,Dinakaran ,
× RELATED ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம்