×

அரசு அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 

மதுரை, ஜன.31: தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலகங்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ்குமார், முனிச்சாமி, கணேசமூர்த்தி உள்ளிட்டடோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும்.

அரசு ஓட்டுநர்களுக்கு காலமுறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். உயர்கல்விக்கு ஊக்கத்தொகை பழைய முறையில் பின்பற்றிட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜராஜேஸ்வரன், தமிழ்நாடு அரசு ஊழிய சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post அரசு அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Government Employees Federation ,Madurai ,Federation of All Tamil Nadu Government Officers, Teachers and Local Government Employees Unions ,Tamil Nadu All Government Offices, Teachers and Local Government Employees Union Federation ,Government ,Employees Federation Demonstration ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...