×

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கீழ்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது அயுப்(26). இவர் தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு உடன் பணியாற்றிய பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற முகமது அயுப், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு அழைத்துச்சென்று உறவு வைத்துக்கொண்டார். தற்போது அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முகமது அயுப் மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து முகமது அயுப்பை நேற்று கைது செய்தார்.

The post இளம்பெண்ணை பலாத்காரம் செய்து திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Mohammad Ayub ,Dhenkanikottai, Kilikottai ,Krishnagiri district ,Dhenkanikot ,
× RELATED தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு