×

களியக்காவிளை அருகே கனிமவளம் கடத்திய டாரஸ் லாரி டிரைவர் கைது

 

நாகர்கோவில், ஜன.29: களியக்காவிளை அருகே கனிமவளம் கடத்திய டாரஸ் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

லாரியில் அனுமதியின்றி குண்டு கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. லாரியை எடைபோட அனுப்பி சோதனை செய்த போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது தெரியவந்தது. எனவே திருட்டுத்தனமாக கற்கள் ஏற்றி வந்த லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் செண்டு(28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

The post களியக்காவிளை அருகே கனிமவளம் கடத்திய டாரஸ் லாரி டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Taurus ,Kaliakavilai ,Nagercoil ,Special Sub-Inspector ,Sivakumar ,Thiruthuvapuram ,Dinakaran ,
× RELATED ரிஷபம்