×

ரெஸ்டோ பாரில் தகராறு பாஜ நிர்வாகி மீது தாக்குதல்: 3 பேர் கைது

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் மண்ணடி தெருவை சேர்ந்தவர் லோகேஷ்குமார் (44). இவர் வேலூர் மாவட்ட பாஜ பொதுச்செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பாஜ நிர்வாகி அசோக்குமார் என்பவருடன் நேற்றுமுன்தினம் இரவு உணவு சாப்பிடுவதற்காக ஆம்பூர் அடுத்த குளிதிகை பெட்ரோல் பங்க் அருகே ராஜஸ்தானை சேர்ந்த லயாசிங் என்பவர் நடத்தும் தாபா ரெஸ்டோ பாருக்கு சென்று உள்ளார். அப்போது லோகேஷ்குமாரும் அசோக்குமாரும் ஓட்டலில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த 3 பேருக்கும் லோகேஷ்குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து லோகேஷ்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி உள்ளனர். தலை உள்பட பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த லோகேஷ்குமார், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பாஜ நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய வேலூர் மாவட்டம் வளத்தூர் புதுமனையை சேர்ந்த பாபு (25), இஸ்மாயில்(24), வசீம்(24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post ரெஸ்டோ பாரில் தகராறு பாஜ நிர்வாகி மீது தாக்குதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Lokesh Kumar ,Mannadi Street, Kudiatham, Vellore district ,General Secretary ,Vellore ,Ashokumar ,Ambur ,Gulitika ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...