×

பிப். 8 நாடாளுமன்ற தேர்தல் இம்ரான்கான் கட்சிக்கு தடை?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது மொத்தமுள்ள 366 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 8ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலை கண்காணிக்க நைஜீரிய முன்னாள் அதிபர் டாக்டர் குட்லக் ஜெனாதன் தலைமையில் அமைக்கப்பட்ட 13 பேர் அடங்கிய காமன்வெல்த் பார்வையாளர் குழுவினர் வரும் 1ம் தேதி பாகிஸ்தான் செல்லவுள்ளனர். 13 பேர் அடங்கிய காமன்வெல்த் குழுவினர், தேர்தலின் அனைத்து நடைமுறைகளையும் கண்காணித்து பரிசீலிப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பாகிஸ்தானில் தங்கியிருந்து தேர்தல் சுந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்வார்கள். இதுகுறித்து காமன்வெல்த் பொதுசெயலாளர் பாட்ரிசியா கூறியதாவது, “பார்வையாளர்கள் குழு காமன்வெல்த் நாடுகளின் பல்துறை நிபுணர்களையும் உள்ளடக்கியது. இந்த குழு தேர்தல் செயல்முறைகளின் விரிவான, சுயாதீனமான மதிப்பீடு பரிந்துரைகளை வழங்கும். இது பாகிஸ்தான் மக்களுக்கும், அதன் அரசாங்கத்துக்கும் தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துவதில் பயனளிக்கும்” என தெரிவித்தார்.

இதனிடையே இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் இம்ரான் கானும், அவரது கட்சியின் உயரதிகாரிகளும் தண்டிக்கப்பட்டால் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை விதிக்கப்படலாம் என செய்திகள் வௌியாகி உள்ளன.

The post பிப். 8 நாடாளுமன்ற தேர்தல் இம்ரான்கான் கட்சிக்கு தடை? appeared first on Dinakaran.

Tags : Imran Khan party ,Islamabad ,Pakistan ,president ,Dr. ,Goodluck Jenathan ,Parliamentary ,Dinakaran ,
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை