×

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகள்: தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்று கண்டனத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்!!

காசா : பாலஸ்தீனத்தை தனி நாடாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி காசாவில் -உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 35,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளது. இந்நிலையில் அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

மேலும் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான முறையான அறிவிப்பு மே 28-ல் வெளியிடப்படும் என்றும் ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து பேசிய நார்வே பிரதமர் ஜோனாஸ், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனிநாடாக செயல்படுவதற்கான அனைத்து உரிமைகளும் பாலஸ்தீனத்திற்கு உள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று அயர்லாற்று பிரதமர் சிம்சன் ஹாரி தெரிவித்துள்ளார். இதனிடையே பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நார்வே, ஸ்பெயின், அயர்லாந்திலிருந்து தூதரக அதிகாரிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றது. ஆலோசனை நடத்துவதற்காக தமது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்துள்ளதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், பயங்கரவாதத்திற்கு ஆதரவு இருப்பதை உணர்த்தும் வகையில் நார்வே, அயர்லாந்தின் செயல்பாடுகள் இருப்பதாகவும், அவர்கள் இப்படி செய்வதால் ஹமாஸிடம் சிக்கியுள்ள இஸ்ரேலிய பணைய கைதிகளை மீட்பதில் மேலும் சிக்கல் உண்டாவதாகவும் கூறியுள்ளார். நார்வே, ஸ்பெயினை தொடர்ந்து மேலும் பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க ஆலோசித்து வருகின்றன.இதுவரை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் 143-நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளன. பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்காத 50 நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பல ஐரோப்பிய நாடுகள் அடங்கும்.

The post பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகள்: தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்று கண்டனத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்!! appeared first on Dinakaran.

Tags : Norway, Spain, Ireland ,Palestine ,Israel ,Gaza ,Norway ,Spain ,Ireland ,Hamas ,Spain, ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்