×

வில்லுக்குறியில் கேரள அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்: 2 பயணிகள் காயம்

 

திங்கள்சந்தை, ஜன.28: கேரள மாநிலம் புனலூர் கரவாளூர் பகுதியை சேர்ந்தவர் ரிஜித் ராஜன் (38). கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காலை வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பஸ்சை ஓட்டினார். கேரளாவை சேர்ந்த ரஞ்சித் நடத்துனராக இருந்தார். பஸ் சுங்கான்கடை தாண்டி வில்லுக்குறியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே நாகர்கோவில் நோக்கி வேகமாக வந்த டாரஸ் லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக கேரள அரசு பஸ்சின் பின்பக்கத்தில் லாரி பயங்கரமாக மோதியது. இதில் கேரள அரசு பஸ்சின் பின்பகுதி கடுமையாக சேதமடைந்தது. மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்த ஐயப்பன், மகாராஜன் ஆகிய இரு பயணிகள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை சக பயணிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின் அவர்கள் வீட்டிற்கு சென்றனர். சம்பவம் குறித்து ரிஜித்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் டாரஸ் லாரி டிரைவர் பாகோடை சேர்ந்த விஜி (36) மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வில்லுக்குறியில் கேரள அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்: 2 பயணிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Taurus ,Kerala government ,Villukuri ,Rijith Rajan ,Karavalur ,Punalur, Kerala ,Kerala State Transport Corporation ,Vadaseri bus ,Thiruvananthapuram ,Kerala ,Dinakaran ,
× RELATED ரிஷபம்