×

கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால்.. மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ்..!!

மும்பை : மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்று வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதால் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மனோஜ் ஜாரங்கே அறிவித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மரத்வடா பகுதியைச் சேர்ந்த மராத்தா பிரிவு மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த 20ம் தேதி மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அந்த சமூகத்தை சேர்ந்த மனோஜ் ஜராங்கே மீண்டும் போராட்டத்தை தொடங்கினார்.

முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் தங்களது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் இட ஒதுக்கீடு தொடர்பான புதிய அரசாணைகளை கொண்ட கோப்புகளுடன் முதல்வரின் தனிச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் போராட்டக் குழுவை சந்தித்து பேசினர். இதனால் சமாதானம் அடைந்த மனோஜ் ஜராங்கே, போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.மேலும் மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் மனோஜ் ஜராங்கே.

The post கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால்.. மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Maratha ,Mumbai ,Manoj Jarange ,MAHARASHTRA ,STATE ,Dinakaran ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...