×

நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்.. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் : ராகுல் காந்தி உறுதி

டெல்லி : பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் செய்த ஊழல் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 2014-ல் இந்தோனேசியாவில் கொள்முதல் செய்த நிலக்கரியை தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 3 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .2014 ஜனவரி முதல் அக்டோபர் வரை மட்டும் தலா 70,000 டன் நிலக்கரியுடன் 24 கப்பல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன. 24 கப்பல்களில் கொண்டு வரப்பட்ட ஒட்டுமொத்த நிலக்கரியும் தமிழ்நாடு மின்வாரியத்துக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணம் தயாரித்து நிலக்கரியை தமிழக மின்வாரியத்துக்கு விற்றதால் அதானி நிறுவனம் பெரும் லாபம் அடைந்தது.

இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,”பாஜக ஆட்சியில் அதானி நிறுவனம் செய்த மாபெரும் நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் நிலக்கரி இறக்குமதி ஊழல் மூலம் மோடியின் அபிமான நண்பர் அதானி மூன்று மடங்கு விலைக்கு தரம் குறைந்த நிலக்கரியை விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார். அதானி நிறுவன நிலக்கரி இறக்குமதி ஊழல் காரணமாக சாமானியர்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக எத்தனை டெம்போக்களில் பணம் பெற்றார் மோடி. அதானி நிறுவன இறக்குமதி ஊழல் மீது சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?.நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அமையும் அரசு விசாரணை நடத்தும். பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்.. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் : ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : ADANI ,Rahul Gandhi ,Delhi ,Indonesia ,Dinakaran ,
× RELATED அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா...