×

புடின், அமெரிக்க அமைச்சர் வாழ்த்து

ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை ஆசியாவிலும், உலகம் முழுவதும் ஏற்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு முக்கியமான இடம் தர வேண்டும். சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது என்றார். அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘அதிபர் ஜோ பைடன் கூறியது போல் இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவானது உலகின் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த சிறப்பு மிக்க நிகழ்வை கொண்டாடும் இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post புடின், அமெரிக்க அமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Putin ,US ,President ,India ,Russia ,Asia ,minister ,Dinakaran ,
× RELATED 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில்...