×

தாளவாடி மலைப் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் நடமாடிய காட்டு யானை

 

சத்தியமங்கலம்,ஜன.26: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் விளைவித்த பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தமிழ்புரம் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அப்பகுதியில் உள்ள பாசில் என்பவரது விவசாய தோட்டத்தில் நேற்று காலை நேரத்தில் நடமாடுவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.

இதை அடுத்து விவசாயிகள் டிராக்டர் இயந்திரத்தை பயன்படுத்தி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காலை நேரத்தில் காட்டு யானை விவசாய தோட்டத்தில் நடமாடியதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தாளவாடி மலைப் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் நடமாடிய காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Talavadi hills ,Sathyamangalam ,Sathyamangalam Tiger Reserve ,Erode ,Thalavadi ,Dinakaran ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த புள்ளி மான்