×

திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு

 

ஈரோடு, மே 20: ஈரோட்டில் திட்டப்பணியால் வாகன போக்குவரத்து பாதிப்பை உடனடியாக சீர் செய்த போலீசாருக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர். ஈரோடு மாநகரில் முக்கிய சாலைகளில் ஒன்றான பெருந்துறை சாலை உள்ளது. இந்த சாலையில் கலெக்ட்ரேட் சந்திப்பு முதல் பழையபாளையம் வரை சாலை விரிவாக்க திட்டப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் போக்குவரத்துக்கு தடை ஏற்படாமல் பகுதி, பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பழையபாளையம் பகுதியில் விரிவாக்க பணிகளுக்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு சரிவர மூடாமலும், தடுப்புகளை அப்புறப்படுத்தாமல் விட்டு சென்றதால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார், போக்குவரத்து இடையூறுக்கு சாலையின் நடுவே சரிவர மூடப்படாத குழி, தடுப்பினை அகற்றாமல் இருப்பதே காரணம் என்பதை அறிந்தனர். இதையடுத்து சாலையின் நடுவே இருந்த தடுப்பை அகற்றியும், குழியை சமன் செய்தும் சீரான போக்குவரத்துக்கு வழி செய்தனர்.

The post திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Perundurai Road ,Dinakaran ,
× RELATED ஒரு வழிப்பாதையில் வந்த 25 பஸ்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி