×

மயங்கி கிடந்த பெண் சாவு

ஈரோடு, மே 21: ஈரோடு சம்பத்நகர் வலம்புரி விநாயகர் கோவில் அருகில் நேற்று முன்தினம் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால், இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மயங்கி கிடந்த பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Valampuri Vinayagar temple ,Sampadnagar ,Erode Government Hospital ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது