×

மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்துடன் சேர்க்க கோரிக்கை

ஈரோடு, மே 21: மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய கிறிஸ்தவ மக்கள் இயக்க நிறுவன தலைவர் டி.ஜான்பால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை, பட்டியல் இனத்துடன் சேர்க்க வேண்டும் என கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை இக்கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பல ஆயிரம் தலித் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்திலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இக்கோரிக்கை குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

The post மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்துடன் சேர்க்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Christians ,Erode ,President ,Christian People's Movement of India ,D. Janpal ,Erode Collector ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது