×

75வது குடியரசு தின விழாவில் பழங்குடியினர் தம்பதி

நன்றி குங்குமம் தோழி

வால்பாறை அடுத்துள்ள, கல்லார்குடி காடர்பழங்குடி சமூகத்தை சேர்ந்த தம்பதி ராஜலட்சுமி – ஜெயபால். இதில் பழங்குடியினர் உரிமைக்காக மக்களை ஒன்று திரட்டி அறவழியில் போராடி நில உரிமை பெற்றுத் தந்தவர் ராஜலட்சுமி. தனது கணவர் ஜெயபால் ஒத்துழைப்புடன், தனது கிராமத்தை இந்தியாவின் மிகச் சிறந்த முன்மாதிரி கிராமமாகவும் மாற்றிக் காட்டியுள்ளார்.

இவர்கள் செயலை பாராட்டும்விதமாக ராஜலட்சுமி-ஜெயபால் தம்பதியினர் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மிகமிக முக்கியஸ்தர் (VVIP) பிரிவில் கலந்து கொள்ள தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசின் பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தில் இருந்து, குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க இந்த தம்பதியருக்கு அழைப்பு வந்துள்ளது.

இவர்கள் செயலை பாராட்டும் விதமாக இந்த ஆண்டு புதுடில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடக்கும் குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக இருவரும் கலந்து கொள்கின்றனர். இதற்காக இம்மாதம் 22 ம் தேதி விமானத்தில் டெல்லி செல்லும் இத்தம்பதி, ஜனாதிபதி தலைமையில் நடக்கும் அணிவகுப்பு மற்றும் விருது வழங்கும் விழாவிலும் கலந்து கொள்கின்றனர். அதன்பின் ஜனாதிபதி வழங்கும் விருந்திலும் பங்கேற்கின்றனர்.குடியரசு தின விழாவில் தங்கள் பகுதியை சேந்த ராஜலட்சுமி-ஜெயபால் தம்பதியர் பங்கேற்பதால், ஆனை மலைத்தொடர் பழங்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொகுப்பு: மணிமகள்

The post 75வது குடியரசு தின விழாவில் பழங்குடியினர் தம்பதி appeared first on Dinakaran.

Tags : 75th Republic Day ,Rajalakshmi – ,Jayapal ,Kallargudi Kadarpalangudi ,Valparai ,Rajalakshmi ,
× RELATED நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் மறைவு முதல்வர் இரங்கல்