×

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: இந்தியாவிலிருந்து 4000 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி

கச்சத்தீவு திருவிழாவிற்கு இலங்கை, இந்தியாவிலிருந்து 8000 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை இலங்கை அரசு அனுப்பியுள்ளது. கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இந்திய, இலங்கை பக்தர்கள் கலந்து கொண்டு இருநாட்டு உறவை மேம்படுத்த நோக்கத்தோடு திருவிழாவுக்கு கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு திருவிழா வருகின்ற பிப்ரவரி 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதால் இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட அலுவலகத்தில் இருந்து சிவகங்கை மறை மாவட்ட அலுவலகத்திற்கும், ராமேஸ்வரம் பங்கு தந்தைக்கும் கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை இலங்கை அரசு அனுப்பியுள்ளது இதனை அடுத்து கச்சத்தீவு திருவிழாவிற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையிலிருந்து 4,000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் என மொத்தம் 8000 பக்தர்கள் மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து 75 விசைப்படகுகளில் பக்தர்கள் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் வரக்கூடிய பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை ஏதும் கொண்டு செல்லாமல் அரசு விதிமுறைகளை கடைபிடித்து வர வேண்டுமென ராமேஸ்வரம் பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.

The post கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: இந்தியாவிலிருந்து 4000 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kachchathivu Anthonyyar Temple Festival ,India ,Sri Lanka ,Kachchathivu festival ,Government of Sri Lanka ,St. Anthony ,Kachchathivi ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்