×

சிறுமுகை பேரூராட்சியில் ரூ.3 கோடியில் வாரச்சந்தையை நவீனப்படுத்தும் பணி துவக்கம்

மேட்டுப்பாளையம்,ஜன.25: சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வாரச்சந்தை இயங்கி வருகிறது.இந்த சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள்,வியாபாரிகள், பொதுமக்கள் என வாரந்தோறும் வியாழனன்று நடைபெறும் சந்தையில் திரளான மக்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில் சிறுமுகை வாரச்சந்தையினை நவீனப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் நீலகிரி எம்பி ஆ.ராசா பரிந்துரையின் படி மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் மூலம் வார சந்தையில் 256 கடைகள் மேற்கூரைகளுடன் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணி நேற்று துவங்கியது.பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் செயல் அலுவலர் ரவிசங்கர் முன்னிலையில் நேற்று பூமி பூஜை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பொறியாளர் அருள்பிரகாஷ்,கவுன்சிலர்கள் தேன்மொழி, சுப்புலட்சுமி, ரங்கராஜ், உமாராணி, சுந்தரி, சூர்யா, ரியாஸ், அஞ்சலி, அங்காள ஈஸ்வரி,சூரியகலா, சாந்தி, கங்காதரன், குமார், பழனிச்சாமி, அமுதா, சூரிய பிரகாஷ் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

The post சிறுமுகை பேரூராட்சியில் ரூ.3 கோடியில் வாரச்சந்தையை நவீனப்படுத்தும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sirumugai Municipality ,Mettupalayam ,Sirumugai ,Dinakaran ,
× RELATED வனத்தை பாழ்படுத்தும் 800 டன் சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றம்