×

வலிப்பு ஏற்பட்டு கேட்டரிங் தொழிலாளி சாவு

ஈரோடு, ஜன. 25: கரூர், திருமணலியூர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமண் (55). இவரது மூத்த மகன் சசிகிரண் (31). கேட்டரிங் வேலை செய்து வந்தார். வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விட்டு அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்லும் சசிகிரணுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது.

இந்த நிலையில், கடந்த 18ம் தேதி, ஈரோட்டுக்கு கேட்டரிங் வேலைக்கு செல்வதாக தனது தந்தையிடம் கூறிவிட்டு வந்துள்ளார். கடந்த 23ம் தேதி மாலையில் ஈரோடு சோலார் பகுதியில் சசிகிரணுக்கு வலிப்பு ஏற்பட்டு விழுந்து கிடந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகிரண், சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிரிழந்தார்.

இதுகுறித்து, சசிகிரணின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வலிப்பு ஏற்பட்டு கேட்டரிங் தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Venkataraman ,Agraharam ,Karur ,Vandaliyur ,Sasikiran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா