×
Saravana Stores

5ம் ஆண்டு கும்பாபிஷேக நாளை முன்னிட்டு பட்டரை எல்லையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சி, பட்டரை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் கடந்த 2019ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில் 5ம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், சிறப்பு ஹேமமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதானமும், மாலை 4 மணியளவில் பொதுமக்கள் ஊர் கூடி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் பாலா (எ) பால யோகி, ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் தினேஷ்குமார், மேல் நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாபு, கவுன்சிலர்கள் யோகாநாதன், நரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது விழா குழுவினர் சிறப்பு அழைப்பாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமை அமிர்தலிங்கம் தலைமையில் விழா குழுவினர்கள் மாதவன், சண்முகம், சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

The post 5ம் ஆண்டு கும்பாபிஷேக நாளை முன்னிட்டு பட்டரை எல்லையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Pattarai Behanayamman ,day ,Tiruvallur ,Arulmiku Sri Behanayamman Thirukoil ,Bhattarai village ,Melnallathur Panchayat of ,Patarai Behanayamman temple ,kumbabhishekam day ,Dinakaran ,
× RELATED நொச்சிலி ஊராட்சியில் குப்பைக் கழிவுகளை சுத்திகரிக்க எதிர்ப்பு