×

கருப்பட்டி தோசை

தேவையானவை

கருப்பட்டி – 100 கிராம்,
கோதுமை மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – 4 டீஸ்பூன்,
நெய் – 100 மில்லி, தேங்காய்த்
துருவல் – ஒரு கப்.

செய்முறை

கருப்பட்டியைப் பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தீயை மிதமாக வைத்து, மாவைக் கல்லில் ஊற்றி, இருபுறமும் நெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.இதே மாவில் அப்பம் தயாரிக்கலாம்.

The post கருப்பட்டி தோசை appeared first on Dinakaran.

Tags :
× RELATED சாமை மிளகு பொங்கல்