×

பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம்

தேவையானவை :

பால் – 3 கப்,
சர்க்கரை – 3 கப்,
கிரீம் – 3 கப்,
பிளாக் கரன்ட் எசென்ஸ் – 5 டீஸ்பூன்,
கருப்பு திராட்சை எசென்ஸ் – 5 டீஸ்பூன்,
கருப்பு திராட்சை சாறு – 2 கப்,
ஜி.எம்.எஸ் பவுடர் – 2 டீஸ்பூன்,
ஸ்டெபிலைசர் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஜி.எம்.எஸ் பவுடரை சிறிதளவு பாலில் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். ஸ்டெபிலைசரை சர்க்கரையில் கலந்து, அதனை பாலுடன் ேசர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். கருப்பு திராட்சையில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு, அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து கொதிக்க வைத்து, சாறு எடுத்துக்கவும். பால், சர்க்கரை, கிரீம், எசென்ஸ், திராட்சை சாறு, ஜி.எம்.எஸ், ஸ்டெபிலைசர் கலவை என அனைத்தையும் சேர்த்து, ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும். 6 அல்லது 7 முறை அடிக்கடி வெளியில் எடுத்து, ஒரு மரக்கரண்டியால் நன்கு அடித்து கிளறவும். தேவைப்பட்டால் பீட்டர் கொண்டும் மிக்ஸ் செய்யலாம். மறுபடியும் 6 முதல் 7 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து செட் செய்தால் சுவையானபிளாக் கரன்ட் ஐஸ்கிரீம் ரெடி.

The post பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!