×

மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மொத்த வாக்காளர்கள் 33,83,710 பேர்; அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4,60,935 பேர்; குறைந்தபட்சமாக பொன்னேரி தொகுதியில் 2,56,687 பேர்

திருவள்ளூர், ஜன. 23: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த இறுதி வாக்காளர் பட்டியல் 2024-ஐ மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதன்படி கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தமுள்ள 330 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,32,777, பெண் வாக்காளர்கள் 1,39,802, பிற பாலினத்தவர் 43 ஆக மொத்தம் 2,72,622 வாக்காளர்கள் உள்ளனர். பொன்னேரி தொகுதியில் மொத்தமுள்ள 311 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,25,362, பெண் வாக்காளர்கள் 1,31,296, பிற பாலினத்தவர் 29 ஆக மொத்தம் 2,56,687 வாக்காளர்கள் உள்ளனர்.

திருத்தணி தொகுதியில் மொத்தமுள்ள 330 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,34,160, பெண் வாக்காளர்கள் 1,38,174, பிற பாலினத்தவர் 28 ஆக மொத்தம் 2,72,362 வாக்காளர்கள் உள்ளனர். திருவள்ளூர் தொகுதியில் மொத்தமுள்ள 296 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,27,343, பெண் வாக்காளர்கள் 1,33,723, பிற பாலினத்தவர் 28 ஆக மொத்தம் 2,61,094 வாக்காளர்கள் உள்ளனர். பூந்தமல்லி தொகுதியில் மொத்தமுள்ள 390 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,80,252, பெண் வாக்காளர்கள் 1,87,626, பிற பாலினத்தவர் 69 ஆக மொத்தம் 3,67,947 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆவடி தொகுதியில் மொத்தமுள்ள 440 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 2,16,640, பெண் வாக்காளர்கள் 2,22,079, பிற பாலினத்தவர் 94 ஆக மொத்தம் 4,38,813 வாக்காளர்கள் உள்ளனர். மதுரவாயல் தொகுதியில் மொத்தமுள்ள 440 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 2,12,454, பெண் வாக்காளர்கள் 2,12,090, பிற பாலினத்தவர் 117 ஆக மொத்தம் 4,22,861 வாக்காளர்கள் உள்ளனர். அம்பத்தூர் தொகுதியில் மொத்தமுள்ள 350 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,77,720, பெண் வாக்காளர்கள் 1,78,503, பிற பாலினத்தவர் 80 ஆக மொத்தம் 3,56,303 வாக்காளர்கள் உள்ளனர்.

மாதவரம் தொகுதியில் மொத்தமுள்ள 467 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 2,28,594, பெண் வாக்காளர்கள் 2,32,229, பிற பாலினத்தவர் 112 ஆக மொத்தம் 4,60,935 வாக்காளர்கள் உள்ளனர். திருவொற்றியூர் தொகுதியில் மொத்தமுள்ள 311 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,34,977, பெண் வாக்காளர்கள் 1,38,980, பிற பாலினத்தவர் 129 ஆக மொத்தம் 2,74,086 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3,665 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 70 ஆயிரத்து 279 பேரும், பெண் வாக்காளர்கள் 17 லட்சத்து 12 ஆயிரத்து 702 பேரும் மாற்று பாலினத்தவர்கள் 729 பேரும் என் மொத்தம் 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 பேர் உள்ளனர்.

மேலும் வருகிற 1.4.24, 1.7.24 மற்றும் 1.10.24 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் அதற்கு முந்தைய காலாண்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் 22.1.24 முதல் அனைத்து அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்கள் அளிக்கலாம். மேலும் http://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் Voter helpline App மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான த.பிரபு சங்கர் தெரிவித்தார். இதில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறியிருப்பதாவது: 1.1.2024 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த இறுதி வாக்காளர் பட்டியல் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப் கலெக்டர் அலுவலகம், பொன்னேரி மற்றும் வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர், திருத்தணி, அம்பத்தூர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் 1, 7 மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர் அலுவலகங்கள், ஆவடி மாநகராட்சி அலுவலகம், திருவள்ளூர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களான 3,885 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1,300 பள்ளிகளில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்காளர் பட்டியலானது ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் உள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக கடந்த 27.10.2023 முதல் 08.12.2023 வரை வரப்பெற்ற 1 லட்சத்து 16 ஆயிரத்து 561 மொத்த விண்ணப்பங்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 351 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மீதம் உள்ள 3210 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

n 16,70,279
ஆண் வாக்காளர்கள்.
n 17,12,702
பெண் வாக்காளர்கள்.
n 729
இதர வாக்காளர்கள்

வ.
எண் தொகுதியின் பெயர் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை ஆண் பெண் மாற்று பாலினத்தவர் மொத்தம்
1. கும்மிடிப்பூண்டி 330 1,32,777 1,39,802 43 2,72,622
2. பொன்னேரி 311 1,25,362 1,31,296 29 2,56,687
3. திருத்தணி 330 1,34,160 1,38,174 28 2,72,362
4. திருவள்ளூர் 296 1,27,343 1,33,723 28 2,61,094
5. பூந்தமல்லி 390 1,80,252 1,87,626 69 3,67,947
6. ஆவடி 440 2,16,640 2,22,079 94 4,38,813
7. மதுரவாயல் 440 2,12,454 2,12,090 117 4,22,861
8. அம்பத்தூர் 350 1,77,720 1,78,503 80 3,56,303
9. மாதவரம் 467 2,28,594 2,32,229 112 4,60,935
10. திருவொற்றியூர் 311 1,34,977 1,38,980 129 2,74,086
மொத்தம் 3,665 16,70,279 17,12,702 729 33,83,710

The post மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மொத்த வாக்காளர்கள் 33,83,710 பேர்; அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4,60,935 பேர்; குறைந்தபட்சமாக பொன்னேரி தொகுதியில் 2,56,687 பேர் appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Ponneri ,Tiruvallur ,District Collector ,T.Prabhushankar ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான...