×

பொதுமக்கள் அச்சம் தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் அரசுக்கு மக்கள் கோரிக்கை

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறன்றனர். எனவே கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 49.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது தலைஞாயிறு பேரூராட்சி. இதில் 17,000 மக்கள் வசித்து வருகின்றனர். தலைஞாயிறு பேரூராட்சியில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள பகுதிகள் மற்றும் அருகில் உள்ள காடந்தேத்தி, மணக்குடி, வாட்டாகுடி, அவரிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் ஆறு மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் இருக்கிறார். மேலும் இவர் இரவு நேரத்தில் இருப்பதில்லை. இரவு நேரத்தில் அவசர நிலையில் உள்ள நோயாளிகள் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாகப்பட்டினத்திற்கும், 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்துறைப்பூண்டிக்கும் சிகிச்சைக்காக செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

The post பொதுமக்கள் அச்சம் தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் அரசுக்கு மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Taluga Taluka Primary Health Centre ,Vedaranyam Taluga Thalanayiri district ,Primary Health Center for Public Fears ,
× RELATED சிறுமியை கடத்திய கண்டக்டர் கைது: ரயிலில் மடக்கிய போலீஸ்