×

இந்திய விமான ஆம்புலன்சை பயன்படுத்த தடை: மாலத்தீவு அதிபர் உத்தரவால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சை கருத்து வௌியிட்டதால் இந்தியா, மாலத்தீவு இடையே உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டோர்னியர் விமானம் மாலத்தீவில் மருத்துவ காரணங்களுக்காக ஆம்புலன்சாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவின் காஃப் அலிப் வில்ங்லியில் வசித்து வந்த 14 வயது சிறுவன் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தான். அந்த சிறுவனை மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதற்காக இந்திய விமான ஆம்புலன்சை பயன்படுத்த அவனது பெற்றோர்கள் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அதிபர் முய்சூ விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்து விட்டார். இதனால் காலதாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்து விட்டான்.

The post இந்திய விமான ஆம்புலன்சை பயன்படுத்த தடை: மாலத்தீவு அதிபர் உத்தரவால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Maldives ,President ,New Delhi ,India ,Modi ,Lakshadweep ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...