- தாம்பரம்
- கோபாலன்
- முதல் தெரு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை
- Thirumullaivayal
- ஸாமுவேல்
- கிருபா
- நாராயணன்
- தின மலர்
தாம்பரம், ஜன.21: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கோபாலன் (72). இவருக்கு, திருமுல்லைவாயலில் 45 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகில் சாமுவேல் என்பவரின் மனைவி கிருபா மற்றும் நாராயணன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இவர்கள் இருவரும் தங்கள் நிலத்தை விற்கும் போது, கோபாலனின் 11 சென்ட் நிலத்தையும் போலி ஆவணங்கள் தயாரித்து பிளாட் போட்டு விற்றுள்ளனர். இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலக மத்திய குற்றப்பிரிவு போலீசில் கோபாலன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருபா மற்றும் நாராயணன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1ல் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி ஸ்டாலின் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில், கிருபா மற்றும் நாராயணன் ஆகியோர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால், இருவருக்கும் தலா 3 ஆண்டு, 3 மாதங்கள் சிறை தண்டனையும், தலா ₹14 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post நிலமோசடி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.