×

ஏமனில் ஹவுதி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

வாஷிங்டன்: இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அமெரிக்காவும், பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவு அளித்து வருகின்றன. செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செல்லும் வணிக கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹவுதியின் இந்த செயலுக்கு பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதியின் இலக்குகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் ராணுவங்கள் 6வது நாளாக தாக்குதல் நடத்தியது. சரக்கு கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்த ஏமனில் உள்ள ஹவுதி படை தளங்களின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின.

The post ஏமனில் ஹவுதி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : US ,Houthi ,Washington ,Britain ,Israel ,Israel-Hamas war ,Hamas ,Yemen ,Hezbollah ,Lebanon ,Red Sea ,Dinakaran ,
× RELATED ஹவுதி ராணுவ வளாகத்தில் குண்டு வீசி தாக்குதல்: அமெரிக்க ராணுவம் தகவல்