×

முகப்பேர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் ₹57 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை: எம்எல்ஏ திறந்து வைத்தார்

பூந்தமல்லி, ஜன.20: முகப்பேரில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி திறந்து வைத்தார். மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட முகப்பேரில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில், போதிய வகுப்பறை வசதி இல்லாததால், இதுபற்றி அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி, மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதியிடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹57 லட்சத்தில் 4 கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து பள்ளிக்கு 4 கூடுதல் வகுப்பறைகள் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. அம்பத்தூர் மண்டல குழு தலைவர் மூர்த்தி, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன், மாநகராட்சி உறுப்பினர்கள் திலகர், மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ புதிய வகுப்பறைகளை மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் செந்தில்சுரேஷ், ஜெயரத்தினம், அண்ணதாசன், குமரேசன், எழிலரசன், நவராஜ், ராஜ்கமல், மற்றும் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post முகப்பேர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் ₹57 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Mukappher Municipal Corporation Primary School ,Poontamalli ,Maduravayal MLA ,Karambakkam Ganapathy ,Corporation Primary School ,Mukkapher ,Municipal Corporation Primary School ,Mukappher ,Maduravayal ,Mukappher Municipal Primary School ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...