×

தாலுகா ஆபிஸ் வளாகத்தில் புத்தர் சிலை பீடம் உடைப்பு

ஆத்தூர், ஜன.19: ஆத்தூர் மைய பகுதியில் உள்ள தாலுகா அலுவலக முகப்பில், கடந்த 1960ம் ஆண்டு, அப்போதைய என்ஜிஜிஓ அமைப்பின் சார்பில், புத்தர் சிலை அமைக்கப்பட்டது. பின்னர், இந்த சிலைக்கு பீடம் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டது. நேற்று காலை, வழக்கம் போல் தாலுகா அலுவலகத்துக்கு வந்தவர்கள், புத்தர் சிலையின் மேற்கூரை மற்றும் அடிபீடம் உடைந்து சிதைந்து காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சேதமடைந்த சிலை பீடத்தை பார்வையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகரமன்ற காங்கிரஸ் உறுப்பினர் தேவேந்திரன், சம்பவ இடத்திற்கு வந்து, பீடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர், இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்ற போது, போலீசார் புகாரை வாங்க மறுத்ததால், புத்தர் சிலையின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். வருவாய்த்துறையினர் அவரை சமாதானப்படுத்தி, உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தாலுகா ஆபிஸ் வளாகத்தில் புத்தர் சிலை பீடம் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Buddha ,Athur ,NGGO ,Taluka ,Dinakaran ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...