×

முந்திரி சிக்கி

தேவையானவை:

முந்திரிப்பருப்பு – 100 கிராம்,
சர்க்கரை – அரை கப்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

முந்திரியை வெறும் கடாயில் குறைந்த தீயில் நன்கு வறுத்தெடுங்கள். ஒரு கடாயில் சர்க்கரையையும்நெய்யையும் மட்டும் கலந்து (கவனிக்கவும்: தண்ணீர் சேர்க்கவே கூடாது) அடுப்பில், குறைந்த தீயில்வையுங்கள்.சர்க்கரை நன்கு கரைந்தவுடன், முந்திரியை அதில் கொட்டிக் கலந்துகொள்ளுங்கள். நெய் தடவிய பலகைஅல்லது சப்பாத்தி கல்லில் முந்திரிக் கலவையைக் கொட்டி, குழவியால் நன்கு மெல்லியதாக தேய்த்துவிடுங்கள்.ஆறியதும் வில்லைகளாக உடைத்து எடுங்கள்.சூப்பர் சுவையில் முந்திரி சிக்கி ரெடி.

The post முந்திரி சிக்கி appeared first on Dinakaran.

Tags : Mundhri Sikki ,
× RELATED சாமை மிளகு பொங்கல்