×

மணிப்பூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் குக்கி இனத்தினர் தாக்கி 2 பாதுகாப்பு வீரர்கள் பலி: ஓயாத துப்பாக்கி சண்டையால் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கு இடமான குக்கி போராளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை 24 மணி நேரத்தில் விடுவிக்காததால், ஆயுதம் ஏந்திய குக்கி போராளிகள் அமைப்பினர் மோரே பகுதியில் மாநில போலீஸ் கமாண்டோ படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள், கமாண்டோ படையினர் இடையே இடைவிடாத துப்பாக்கி சண்டை நடந்தது.

எஸ்பிஐ மோரே பகுதியில் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் கமாண்டோ படையை சேர்ந்த 2 வீரர்கள் பலியானார்கள். இதில் காயமடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் தேவை எனவும் மாநில உள்துறை கமிஷனர் ரஞ்சித் சிங் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். குக்கி பழங்குடியின பெண்கள் சாலைகளை மறித்துள்ளதால் ஹெலிகாப்டர் தவிர வேறெந்த வழியிலும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த ஆண்டு மே மாதம் கலவரத்தின் போது போலீசார் ஆயுதங்களை திருடிச் சென்ற வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு எதிராக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை அசாம் கவுகாத்தியில் உள்ள கம்ரப் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

The post மணிப்பூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் குக்கி இனத்தினர் தாக்கி 2 பாதுகாப்பு வீரர்கள் பலி: ஓயாத துப்பாக்கி சண்டையால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Kukis ,Tamil ,Manipur ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...