×

திருவள்ளுவருக்கு காவி உடை ஆளுநர் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வது நல்லதல்ல: தம்பிதுரை எம்பி பேட்டி

கிருஷ்ணகிரி: ‘கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்பி., கலந்து கொண்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘அண்ணாதுரை கூறியது போல், இந்திய அரசியலமைப்பில் உள்ள 8வது அட்டவணையில் உள்ள தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கினால் தான், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதை நடைமுறைப்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்க வேண்டும்ஞ என்றார். அப்போது, திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, தமிழக ஆளுநர் வாழ்த்து கூறியது குறித்த நிருபர்கள் கேட்ட போது, ‘அவர் சட்டத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வது நல்லதல்ல’ என்று தெரிவித்தார்.

The post திருவள்ளுவருக்கு காவி உடை ஆளுநர் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வது நல்லதல்ல: தம்பிதுரை எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thambidurai ,Krishnagiri ,AIADMK ,Policy ,Propagation ,Sindakampalli ,Parkur, Krishnagiri district ,Annadurai ,Thiruvalluvar ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்